சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர் மொகடிஷூவில் தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது கொல்லப்பட்டார்.
அப்டியாஸ் அஃப்ரிக்கா என அழைக்கப்படும் அவர், பயங்கரவாத ஆயுத குழுவான அல்-ஷாபாப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வந்ததுடன், அது குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்த தாக்குதலின்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-ஷபாபே காரணம் என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடாகவியலாளர் மொகடிஷூ வானொலியுடன் இணைந்து தமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது மிலேசத்தனமான பயங்கரவாத நடவடிக்கை என சோமாலிய பிரதமர் மொகமட் ஹூசீன் ரோபில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ ஒத்துழைப்புடன் செயல்படும் சோமாலிய அரச படைகளுடன் கடந்த ஒரு தசாப்தகாலமாக அல்-ஷாபாப் ஆயுதக்குழு தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோ
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீட
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர் உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த
