More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மர்மமாக உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பிலான தகவல் வெளியானது!
மர்மமாக உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பிலான தகவல் வெளியானது!
Dec 20
மர்மமாக உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பிலான தகவல் வெளியானது!

முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அன்று பாழடைந்த வளவின் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 13 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக/ அல்லது கருக்கலைப்புக்கு  உட்படுத்தப்பட்டு இரத்த போக்கு ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார்.



அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என புதுக்குடியிருப்புப்காவற்துறையினர் தெரிவித்தனர்.



யோகராசா நிதர்ஷனா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (18)இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.திருகோணமலைக்கு இவரது குடும்ப அங்கத்தவர்கள் சென்றிருந்த நிலையில் தாயாருடன் தனிமையில் வீட்டில் இருந்த சிறுமி அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களை நிறுத்த சென்ற சமயத்தில் கடந்த 15 ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாக இவரது தாயாரால் கடந்த 15 ஆம் திகதி மாலை   2 மணிக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது ,திருகோணமலையில் உள்ள   மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற சிறுமி , கடந்த ஜூலை மாதம் வீடு திரும்பியிருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டிலேயே குடும்பத்தினருடன் வசித்து வந்திருந்தார்.



காணாமல் போயிருந்த சிறுமி தனது  வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பாழடைந்த வளவின்  பற்றைக் காணி ஒன்றில் நேற்று முன்தினம்  18ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.



முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் ரி .பரஞ்சோதி முன்னிலையில்  கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிக்காவற்துறை மா அதிபர் தலைமையிலான காவற்துறை குழுவின் விசாரணையோடு சடலம் மீட்கப்பட்டு   உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் சடலம் மீதான பரிசோதனைகள்  இடம்பெற்றது.



குறித்த பரிசோதனையில் சிறுமியின் பெண் உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநர் சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்தோடு சடலம் மீதான பரிசோதனையில்  சிறுமி 2 மாத கருவுற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.



இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டாரா? கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டாரா? சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா? போன்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புதுக்குடியிருப்புப் காவற்துறையினர் தெரிவித்தனர்.



சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் நேற்று முந்தினம்  (18) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு சிறுமியின் பெற்றோரும் விசாரணைக்காக நேற்றைய தினம் (19) காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன

Feb04

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத

Feb08

தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா

Jun15

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய

Jan27

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி

May25

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த

May04

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க

Sep07

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட

Feb02

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Mar31

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த

Jul10
Feb09

நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,

Oct24

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்

Oct05

நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:22 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:22 am )
Testing centres