தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.
மோனிகா என்பவரை இமான் 2008-ம் ஆனது திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இமான் தற்போது தான் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிகா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம்.
எங்கள் நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி" என்று பதிவு செய்திருக்கிறார்.

தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங
பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை
சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச ஹாரிபாட்டர் கதை என்றால் இப்போது வரைக்கும் தெரியாதவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பிநடிகர் அஜித்
