உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது.
அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது.
சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு பொருட்களும் சரிவர கிடைக்காததால் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சியான் நகரவாசி ஒருவர் கூறும் போது, “நான் காம்பவுண்டு வீட்டில் வசித்து வருகிறேன். அவசரத்துக்கு கூட நூடுல்ஸ் கிடைக்கவில்லை. இப்படியே இருந்தால் பட்டினி கிடந்து சாவ வேண்டியது தான்” என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் இந்த நகரத்தைச் சேர்ந்த பொது மக்களும் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின
ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந
அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத
