மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவர் தயாரித்த ரைட்டர் திரைப்படம், தியேட்டரில் வெளியாகி விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்து கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கி நல்ல பாராட்டுக்களை பெற்றார். இதன் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் கோப்ரா, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் தயாரிப்பாளருமான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்
தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின
சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி