பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம்கான்.நேற்று இரவு இவர் மருமகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம மனிதர்கள் காரை துப்பாக்கி முனையில் மறித்தனர். பின்னர் அவர்கள் எனது காரை நோக்கி துப்பாக்கியால்சுட்டு தன்னை மிரட்டியதாக ரெஹாம்கான் குற்றம் சாட்டி உள்ளார். பின்னர் அவர் வேறு காரில் சென்றார்.
அவர்கள் யார்? என்று தெரியவிலலை. எதற்காக பின்தொடர்ந்து வந்தார்கள் என்றும் தெரியவில்லை. இது குறித்து ரெஹாம்கான் கூறும்போது, ‘இது இம்ரான்கான் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைகாரர்கள் நாடாக மாறி விட்டது’ என்று கூறினார்.
முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரும், பத்திரிகையாளருமாக இருந்து வந்த ரெஹாம்கான் கடந்த 2014-ம் ஆண்டு இம்ரான்கானை திருமணம் செய்தார். அடுத்த ஆண்டு அவர்கள் பிரிந்து விட்டனர்.
தற்போது 48 வயதான அவர் தனது முன்னாள் கணவரான பிரதமர் இம்ரான்கானை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பா
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து
நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்