குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் தாக்கியதில் கணவன் பலி!
மனைவி கோடரியால் தாக்கியதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இன்னிலையில் கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழ
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
