இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார் .
இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்து காணப்படுகின்றது.
இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று. இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு அறிவித்துள்ளனர்.
மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும் ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து பார்வையிடவில்லை.பதில் நீதவானை அமர்த்திவிட்டு இங்கு வர முடியாத நிலையில் நீதித்துறை உள்ளது. எங்களை நாமே ஆளும் ஆட்சி முறை வேண்டும்.
இந்த கொலையில் யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் இரவு மீன்பிடிக்கச்சென்ற மாதகல் பகுதி மீனவர் ஒருவர் (எட்வேட் மரியசீலன் -வயது 31) இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடயà
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செà
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைகà
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கà
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சிà®
சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டà
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேரà
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலிà
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்à®
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சà
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அà
