More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா? மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.
 குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா? மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.
Jan 12
குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா? மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.01.2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞரான ஜமீல் மிஸ்பரின் மரணம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



குறித்த இளைஞன் 05.01.2022 அன்று குச்சவெளிப் காவல்துறையினரால் பேருந்தினை இடைமறித்து கைது செய்ய முற்பட்ட போதும் அவர் தப்பித்து காட்டுப்பகுதியினை நோக்கி ஓடியதாகவும் அவரை காவல்துறையினர் கலைத்து சென்றதாகவும் பின் மறுநாள் காலையில் அவரது உடலம் நீருடனான சேற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.



குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்களால் காவல்துறையினருக்கு எதிராக பரவாலான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.



அதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலை அதிகாரிகள் குறித்த இளைஞனின் உறவினர்களை அவர்களது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளதுடன் அவர்களின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளதாக தெரியவருகின்றது.



இவ்விடயம் குறித்து திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரான சட்டத்தரணி ஆர்.எல் வசந்தராஜா அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலைப் பிராந்திய காரியாலயமானது விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.



1996 ஆம் ஆண்டின் 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய தனது சொந்த பிரேரணை அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண சà®

May02

புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுà®

Feb01

இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா

Oct24

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்கà®

Mar19

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கபà

Sep09

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்  என தமிழர் வà®

Jun06

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக

Mar19

மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை

Aug06

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்à

Sep24

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெள

Apr09

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராà

Mar03

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி

Jan13

யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்திà®

Mar25

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்

Mar16

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:47 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:47 am )
Testing centres