பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை, வெதகொடலந்த பிரதேசத்தில் சிறிய குடிசையில் வசித்து வந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
சுமார் 45 நாட்களுக்கு முன்னர், நள்ளிரவில், குடிசைக்குள் புகுந்த நரி, உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கால்களின் குதிகால் பகுதியைக் கடித்து சென்றுள்ளது. எனினும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என வைத்தியர் தமர களுபோவில கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி அவருக்கு வெறிநோய் அறிகுறிகள் தோன்றியதாகவும், அவரது இரு மகன்களும் அவரை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், மறுநாள் அவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பேருவளை வளதர வெதகொட பிரதேசத்தில் நரி, நாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் வளர்ப்பு நாய்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்
ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
சட்டவிரோதமாக 75 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியமை தொட
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
