2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2014, 2015 ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார் ஸ்டார்க். 27 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டி நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களைத் தன் குடும்பத்தினருடன் செலவழிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார் ஸ்டார்க் என தகவல்கள் வெளிவந்துள்ளன .
அவருடைய மனைவி அலிஸா ஹீலி, அவுஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பராக உள்ளார். இந்த நிலையில் பிப்ரவரியில் நடைபெறும் மெகா ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள ஸ்டார்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் 2022 போட்டியில் கலந்துகொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி ஸ்டார்க் தெரிவிக்கையில், ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வது தொடர்பாக ஆவணங்களைத் தயார்படுத்த எனக்கு இரு நாள்கள் தேவைப்படும்.
என்னுடைய பெயரை இன்னும் நான் அளிக்கவில்லை. இதுதொடர்பாக முடிவெடுக்க எனக்குச் சில நாட்கள் உள்ளன. கடந்த ஆறு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை.
இனி எத்தனை சர்வதேசப் போட்டிகள் இருந்தாலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் எண்ணத்தில் உள்ளேன். இந்த வருடம் டி20 உலகக் கிண்ணம் நடைபெறுவதால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது பற்றி யோசிக்கலாம் என்றார்.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன