சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல்குமார் என்ற மகன் இருந்துள்ளார்.
இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி கொண்டிருந்த விமல்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் விமல் குமார் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த பெற்றோர் விமல் குமாரிடம் இருந்து செல்போனை பறித்து வீட்டில் மறைத்து வைத்துவிட்டனர்.
அதன்பின் விமல்குமாரின் பெற்றோர் உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் பெற்றோர் செல்போனை வாங்கிக் கொண்டதை நினைத்து மன உளைச்சலில் இருந்த விமல்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடுà®
இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ
குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வநà
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளிà®
அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்
அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அதà
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடà
வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொà®
