மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததா என்பது குறித்து போலீசார் விசேட விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாா்தா மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் சிறுவனின் பெற்றோர் அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்குமாறு அவளின் பெற்றோரை மிரட்டியதாக தெரிகிறது.
இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த பெற்றொர் வார்தா மாவட்டம் அர்வி தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சிறுவனின் பெற்றோரை கைது செய்ததுடன் சட்டவிரோதமாக கருவை கலைத்த மருத்துவரையும் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து போலீசார் அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தியதில் மருத்துவமனை வளாகத்தில் சிசுக்களின் 11 மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அந்த ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக மேலும் பல கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறà
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியானà
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்றà
தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக à®
ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அளà
நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பà
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எகà
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி மà
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் à®
அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்à
