களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற 6 சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
55 வயதான தனது கணவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி ரஞ்ஜினி எதுத்சூரிய என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது கணவனின் தலையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான தாக்குதலில் படுகாயமடைந்தவர் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கணவர் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கல்பாத்த, பருவபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிலையில் அன்றைய தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதன் போது சிலர் தன் முன்னிலையில் கணவனை கொடூரமாக தாக்கியதாகவும் ஒருவர் அவரது கழுத்தை நெறித்ததாகவும் மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை அடையாளம் காட்டியுள்ள நிலையில் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
நாட்டின் பொருளாதாரத்த
