கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 6 பேர் இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த காலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார பிரிவுகளிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும் இந்த விடயம் தொடர்பில் பெரிதாக ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் சுகாதார பாதுகாப்பை மீறி செயற்படுகின்றார்கள்.
முகக்கவசம் அணிவதில்லை. அத்துடன் சுகாதார பரிசோதகர்களுக்கு ஓய்வு பெற அறையில்லாத நிலைமை ஒன்று காணப்படுகின்றது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கடமையில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
