நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷாலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையொட்டி து.ப.சரவணன் இயக்கத்தில் தான் அடுத்ததாக நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Start Music - Premier League எ
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானச
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்க
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்
அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற தி
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம