நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
கேரளாவில் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையினர் நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர். இதில் கொரோனா பாதித்தோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் காட்டிய அலட்சியமும் நோய் பரவலுக்கு காரணம் என தெரியவந்தது.
இதுபோல மாநிலம் முழுவதும் மலையோர மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதையும் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்à
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபà®
தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்களà
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தà®
திமுக தலைவர்
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்கà காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தà® போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்கà பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில
