ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘ஊரடங்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்’’ என கூறினார்.
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண
உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வல
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த
சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆ
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட