மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் நயன்தாராவுடன் அஜ்மல் அமீர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா அடுத்ததாக ‘பிரேமம்’, ‘நேரம்’ படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க இருக்கிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் அஜ்மல் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப
அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு
தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன
போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக