ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அம்ருல்லா சாலே மறுத்துள்ளார். பின்னர் தலிபான் தலைவர்களும் இந்த தகவலை மறுத்தனர்.
ஆனால், பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான் வசம் வந்துவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியதால், தலிபான் படையினர் உற்சாகத்தில் திளைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்வாறு, காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் செய்தி நிறுவனங்கள் கூறி உள்ளன.
இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கண்டித்துள்ளார். வானத்தை நோக்கி சுடுவதை தவிர்த்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் என்று அவர் டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே தேவையில்லாமல் சுடவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க
ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ர