More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!
Sep 04
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

 



இந்த மாதம் இறுதியில் அவரது அமெரிக்கா சுற்றுப்பயணம் இருக்கும் என்று தெரிகிறது.



வருகிற 22-ந்தேதி முதல் 27-ந்தேதிக்குள் அமெரிக்காவுக்கு செல்லலாம் என்றும் அங்கு வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 23, 24-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.



அப்போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பிறகு அங்கு பிரதமர் மோடி முதல் முறையாக செல்ல உள்ளார்.

 



ஏற்கனவே இரு நாட்டு தலைவர்களும் மூன்று முறை காணொலி காட்சி முலம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.



மார்ச் மாதம் நடந்த குவாத் மாநாடு, ஏப்ரலில் நடந்த பருவ நிலை மாற்ற மாநாடு மற்றும் ஜூனில் நடந்த ஜி-8 மாநாட்டில் இருவரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று இருந்தனர்.



இங்கிலாந்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம் ரத்து செய்யப்பட்டது.



தற்போது ஜோ பைடனும், மோடியும் நேரில் சந்திக்க உள்ளனர். இரு தலைவர்கள் சந்திப்பில் முக்கிய வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.



குறிப்பாக ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் சீனாவின் செயல்பாடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ள சூழ்நிலையில் ஜோ பைடன்- மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 



கடைசியாக பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-à

Mar13

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூà®

Oct04

மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற

May01

கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப

Oct14

ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பகà

Oct07

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத

Jul24

கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி செà®

Feb04

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்à

Sep28

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா

May21

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடநà¯

Mar18

ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தாராளமாக மணல்கொள்ளை அடிக்à

Mar15

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,

Sep24

தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '

Feb21

 இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத

Jan22

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:39 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:39 pm )
Testing centres