More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இத்தாலிக்கான சிறிலங்கா தூதர் நியமனத்தில் இழுபறி!
இத்தாலிக்கான சிறிலங்கா தூதர் நியமனத்தில் இழுபறி!
Sep 07
இத்தாலிக்கான சிறிலங்கா தூதர் நியமனத்தில் இழுபறி!

இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயசை ஏற்பதா இல்லையா என்பது குறித்து இத்தாலி அரசாங்கம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



முன்னதாக கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் போர்க் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து சுமங்கல டயஸின் நியமனத்தை கனேடிய அரசாங்கம் நிராகரித்திருந்ததது. விமானப்படை முன்னாள் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தற்போதைய இராணுவத் தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா வன்னிப் போரில் தலைமை வகித்த 57,58, 59ஆவது படையணிகளுக்கு விமானப்படை தாக்குதல் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்.



இறுதிப் போரில் விமானப்படையின் பதில் தளபதியாக செயற்பட்ட அவர், விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் மீது போர்க் குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அரச படையினரின் முன்னணி பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றார்.



இந்த நிலையில் எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், தற்போதைய கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தினால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட போதிலும் போர்க் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அவரின் நியமனத்தை கனேடிய அரசாங்கம் நிராகரித்திருந்தது.



அதனையடுத்தே எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் இத்தாலிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். எனினும் அவரது நியமனம் குறித்து இத்தாலிய அரசாங்கம் கடந்த 05 மாதங்கள் கடந்தும் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இத்தாலித் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



பெரும்பாலும் இத்தாலி அரசாங்கத்தினாலும் அவரது நியமனம் நிராகரிக்கப்படலாம் என்று கூறப்படுகின்ற போதிலும் எதிர்வரும் வாரம் இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்நாட்டுப் பிரதமருடனான சந்திப்பின்போது இதுகுறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar25

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதà®

May03

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லியà

Feb06

ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ

Feb03

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீனà

Jun25

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல

Apr05

மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல் à

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்

Sep07

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதாà

Jul19

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னà¯

Mar25

வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகரசபையின் குத்தகை ஒபà

Oct01

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையினà¯

Mar09

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருà®

Mar07

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்à

Feb18

இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும

Sep26

மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதிà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (08:52 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (08:52 am )
Testing centres