தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் திட்டம் 2, பூமிகா ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இவர் அடுத்ததாக கிரைம் படங்களுக்கு பெயர் பெற்ற ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்க இருக்கிறார். இப்படம் குறித்து தயாரிப்பாளர் அருள் குமார் கூறும்போது, ‘இது ஒரு கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, அர்ஜூன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும். இயக்குனர் தினேஷ் லட்சுமணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் அர்ஜூன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்’ என்றார்.

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்க
பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த
தமிழ் சினிமாவின் உ
என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்ப
தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க
