தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும் என ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 59 நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் தமது தொழிற்சங்க போராட்டத்தினால் மரணவர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்திற்கான முழு பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதியுடனும், நிதியமைச்சருடனும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு தொடர்ந்தும் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
பல அமைச்சரவை கூட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றில் முறையான தீர்வு எட்டப்படவில்லை.
இதனால் மாணவர்களே பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப்
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன
