ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்பட பத்திரிகையாளர் மலை உச்சியில் இருந்து தவறி விழும்போது அவரை காப்பாற்ற அங்கிருந்து குதித்த ரஷ்ய பேரிடர் துறை அமைச்சர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அவசரகால அமைச்சர் எவ்ஜெனி ஜினிசெவ் தலைமையில் பனி நிறைந்த ஆர்டிக் பகுதியில் கடந்த 2 நாட்களாக பேரிடர் பயிற்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டு வந்தன. இதில் 6,000 பேர் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக கிராஸ்நோயர்ஸ்க் மாகாணத்தின் நாரில்ஸ்க் நகரில் நேற்று பயிற்சி நடந்தது.
அப்போது பயிற்சி ஒத்திகையை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த புகைப்பட பத்திரிகையாளர் கால் தவறி மலை உச்சியிலிருந்து விழுந்தார். உடனடியாக அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீரில் குதித்த அமைச்சர் எவ்ஜெனி உயிரிழந்தார். இது குறித்து அரசு நிதி உதவியுடன் செயல்படும் ரஷ்யா டைம்ஸ் பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மார்கரீட்டா சிமோன்யான் தனது டிவிட்டரில், ``தண்ணீரில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த கூரிய முனை கொண்ட பாறையில் தலை மோதியதில் அமைச்சர் எவ்ஜெனி உயிரிழந்தார்,’’என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா
ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம்
அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை
உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன
மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி
குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்
