உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் 7-வது ஆளுநராக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி முதல் பதவி வகித்து வந்தவர் பேபி ராணி மவுரியா (65). இவர் நேற்றுமுன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இவர் மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் பதவி வகித்த 2-வது பெண் ஆளுநர் ஆவார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், பேபி ராணி மவுரியா பதவி விலகி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில், உத்தரகாண்டின் ஆளுநராக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அசாம் ஆளுநராக பதவி வகித்து வரும் ஜகதீஷ் முகி கூடுதலாக, நாகாலாந்து ஆளுநர் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ
மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிà
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக
முன்னாள் முதல்-மந்திரி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தà காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமà வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் à சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கà தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூடà
