ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. தற்போது அரசமைப்பதில் தலிபான் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் தலிபான்களின் பழமைவாத கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் கொதிப்பில் உள்ள ஒரு பகுதி மக்கள், அவர்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்றத் தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் காபூலில் இருக்கும் நார்வே நாட்டுத் தூதரகத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான், பல அட்டூழியங்களை அங்கு நிகழ்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஈரான் நாட்டுக்கான நார்வே தூதர் சிக்வால்டு ஹாக், 'தலிபான்கள், தற்போது காபூலில் இருக்கும் நார்வே தூதரகத்தைக் கைப்பற்றியுள்ளனர். எங்கள் நாட்டுத் தூதரகத்தை மீண்டும் ஒப்படைப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அங்கிருக்கும் ஒயின் பாட்டில்களை உடைத்துள்ளனர். சிறுவர்களுக்கான புத்தகங்களை அழித்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை துப்பாக்கிகள் மிக ஆபத்துக் குறைவானவை போல' என்று வருத்தத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தலிபான், வெளிநாடுகளின் தூதர கட்டிடங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக உள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப
ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக
ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபா
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் ச
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின 15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட
