தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. மார்கிராம் 48 ரன்னும், ஹென்ரிக்ஸ் 38 ரன்னும், டி காக் 36 ரன்னும் எடுத்தனர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் ஓரளவு தாக்குப் பிடித்து 66 ரன்கள் எடுத்தார். சமிகா கருணரத்னே 22 ரன்னும் எடுத்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என சமனிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது மார்கிராமுக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
