பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களுக்குள் சீர் செய்ய முடியாது. நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்து ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கி ஆளுநர் விவகாரத்தில் நபரை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகள் ஏதும் கிடையாது. பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் உரிய பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இவ்விடயத்தில் மாற்று கருத்துகள் குறிப்பிட முடியாது.
பல்வேறு காரணிகளினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமைக்கு அமைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களில் சீர் செய்ய முடியாது.
நீண்டகால கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என அனைத்து துறைகளையும் உள்ளிடக்கிய வகையில் பலமான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
பொருளாதார கொள்கை ஆட்சிமாற்றத்திற்கு அமைய மாற்றமடைவதால் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியாதுள்ளது. நிலையாக கொள்கை திட்டம் வகுக்காமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்றமுடியாது என்றார்.
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ
