சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயிரை பறித்துள்ளது. மேலும், 60 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு சிசுவான் மாகாணத்தில் நேற்று அதிகாலை 4.33 மணிக்கு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த அதிர்வுகள் 10 கிமீ தூரம் வரை உணரப்பட்டது. இந்த பூகம்பத்தால் லுக்சியான் மாவட்ட பகுதியில் 3 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்துள்ளனர். 730 வீடுகள் இடிந்துள்ளன.
7,290 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சம்பவ இடத்தில் 890 தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர், மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பூகம்பத்தால் மக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். கடும் மழையும் பெய்து வருவதால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதே மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு, ரிக்டேர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பயங்கர பூகம்பம் தாக்கியதில் பல ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செ
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
