காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளுமான பிரியங்கா காந்தி, இமாசலபிரதேச தலைநகர் சிம்லா அருகே உள்ள சாரபாராவில் ஒரு காட்டேஜ் கட்டியுள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில், 4 அறைகள் கொண்ட இந்த அழகிய காட்டேஜ் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் சோனியா காந்தி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சண்டிகார் சென்றார். அங்கிருந்து காரில் சிம்லா சென்றடைந்தார். சோனியா காந்தியுடன் அவரது பாதுகாப்பு படையினரும் சென்றனர். ஏற்கனவே பிரியங்கா காந்தி தனது கணவர், குழந்தைகளுடன் ஒரு வாரத்துக்கு முன்பு சிம்லா காட்டேஜுக்கு சென்று தங்கியுள்ளார்.
பஞ்சாப் புதிய முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் பதவியேற்பு விழாவில் நேற்று பங்கேற்ற ராகுல் காந்தியும், சண்டிகாரில் இருந்து சிம்லா சென்று தாய், சகோதரியுடன் இணைந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
ஆக, இவர்கள் குடும்பமாக பிரியங்கா காந்தியின் காட்டேஜில் தங்கியிருக்கப் போகிறார்கள். அப்போது கட்சியினர் யாரையும் சந்திக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் உள்கட்சிப் பூசல் தலைவலி போன்றவற்றுக்குப் பின் சில நாட்களை அமைதியாக கழிக்கத் திட்டமிட்டு சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் சிம்லா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக்
இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ப உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில் குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்
