நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.
தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் முன் அறிவிப்போடு தான் வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக அந்த டிரெண்ட் மாறி உள்ளது. அஜித்தின் வலிமை குறித்த அறிவிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டன. அதேபோல் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ அப்டேட்டும் அவ்வாறே வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ
சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந
கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்
இயக்குனர் விக்
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்
