தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கணேசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாடு இணை இயக்குநரிடம் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி கோரிக்கை மனு அளித்துள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, நீரி உருவாக்கிய பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க சங்கத்தைச் சேர்ந்த ஆலைகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசியைச் சுற்றியுள்ள 8 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும். நாட்டின் பன்முக பழக்கவழக்கங்கள், பண்பாடு, சமய சடங்குகளை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைந்தபட்சம் 6 மணி நேரமாக உயர்த்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்
ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க
உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த
தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
