கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அர்த்தமற்ற வகையிலேயே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த மின் நிலையத்தை 10 ஆண்டுகளாக இயற்கை எரிவாயு மின்நிலையமாக மாற்ற முடியாத நிலையில் அதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என கூறினார்.
எரிசக்தி துறை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கியமான துறை என்பதனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும் இத்தகைய வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றும் அதன் பங்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத
மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
