லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழிகள் இன்று சமகால அரசாங்கம் திணறி வருகிறது.
இந்நிலையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனை கட்டுப்படுத்த அரசினால் முடிவில்லை. இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெற்றோலின் விலைகள் மிகவும் குறைவான மட்டத்திலேயே பேணப்பட்டு வந்தன.
அப்போதைய எதிர்க்கட்சியான இருந்த சமகால அரசாங்க தரப்பினர், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திற்கு சைக்கிள் மூலம் சென்றிருந்தனர்.
இதில் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
