2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன (L.M.D Dharmasena) தெரிவித்தார்.
நாளைய பரீட்சைக்கு 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் என மொத்தம் 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்காகவும், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்காகவும் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் 29 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்து தமது பரீட்சை இலக்கங்களுக்கு ஏற்ப ஆசனங்களை அடையாளம் காணுமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு செல்லும்போது, தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் பரீட்சை அனுமதி அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீச
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
உலகநாயகன் கமல
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
