கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற்றுக்கொள்வதில் பொதுமக்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாளாந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியினை பெறுவதற்காகத் தடுப்பூசி மையங்களுக்கு பிரவேசிக்கின்றனர். இது ஒரு சிறந்த விடயமாகும். அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வது அவசியமாகும்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் 39, 772 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,777,838 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நேற்றைய தினம் 1,156 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 1,411 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
408 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 537 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந
QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
