More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 8 வருடமாக கணவனுக்கு சாப்பாட்டில் மருந்து கொடுத்த மனைவி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
8 வருடமாக கணவனுக்கு சாப்பாட்டில் மருந்து கொடுத்த மனைவி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
Feb 08
8 வருடமாக கணவனுக்கு சாப்பாட்டில் மருந்து கொடுத்த மனைவி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்பாட்டில் மனநிலை பாதித்த மருந்தை கலக்கி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சதீஸ்(38). இவரின் மனைவி ஆஷா(34) இவர்கள் முதல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி வசித்து வருகிறார்கள்.



தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவரது கணவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனது மனைவியை உடலளவிலும், மனதளவிலும், வன்கொடுமை செய்து வந்துள்ளார்.



இதனால், ஆத்திரமடைந்த மனைவி ஆஷா அவரை அடக்க வேண்டும் என மனநிலை பாதித்தவர்கள் சாப்பிட வேண்டிய மருந்தை அவரது சாப்பாட்டில் கலந்துகொடுத்துள்ளார். அன்று முதல் அவரது கணவரின் உடல்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.



இதை ஆஷா கடந்த 8 வருடங்களாக செய்து வந்துள்ளார். இதனால் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த கணவர் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் வீட்டில் சாப்பிடாமல் ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவெடுத்து, மூன்று வேளையும் ஹோட்டலில் சாப்பிட்டு வந்தார். அப்போது அவரது உடல் நிலையில் 20 நாட்களாக எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது.



அப்போது தான் அவர் வீட்டு சாப்பாட்டில் தான் ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டார். பின்னர், மனைவியின் தோழி ஒருவரை கடந்த வாரம் சந்தித்து இந்த நிலைமையை எடுத்துக் கூறினார்.



அப்போது இந்த தோழி அவரின் மனைவி சாப்பாட்டில் கலக்கி கொடுக்கும் மருந்தைப் பற்றி தெளிவாக கூறியுள்ளார். உடனடியாக சதீஷ் தன் மனைவிமீது பாலா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.



இதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர் மனைவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 8 வருடமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக உண்மையை ஒப்புக்கொண்டார்.



மேலும், தினசரி செய்த கொடுமையே என போலீசில் தெரிவித்தார். இதனையடுத்து அவரது வீட்டை போலீசார் பரிசோதித்தபோது ஒரு அறையில் பெட்டி பெட்டியாக மனநிலை பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



பின்னர், சதீஷின் மனைவி ஆஷாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr24

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை

Apr08

சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந

Feb08

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட

Aug25

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Sep18

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர

Mar28

பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித

Jul27

கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்

Feb26

சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த

Jan19

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம

Jul07

இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனி

Apr19

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதின

Aug12
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:06 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:06 am )
Testing centres