வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்த இலங்கை நாட்டவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாகச் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் 25 காணொளிகளைத் தமது கைபேசியில் வைத்திருந்த 25 வயதான கொலம்பகே தனுஷ்கா சமாரா பெரேரா என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு இலங்கையரான ஹிண்டாகும்புரே ஷரிந்து தில்ஷன் ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நாட்டவர்கள் பலரைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஒன்றைத் தாம் தொடங்கியிருப்பதாக கொலம்பகேயிடம் ஷரிந்து தில்ஷன் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் தொடங்கிய அந்த வாட்ஸ்அப் குழுவில் கொலம்பகே இணைந்தார்.
சொந்த நாட்டு நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அந்த குழு தொடங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஆபாசக் காணொளிகள் அதில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ்அப் குழுவில் ஆபாசக் காணொளிகள் வலம் வருவது தெரிந்தும் கொலம்பகே அதில்இருந்து வெளியேறவில்லை.
ஆபாசக் காணொளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது தமது கைபேசியில் பதிவான ஆபாசப் படங்களை நீக்க முயன்றதை கொலம்பகே ஒப்புக்கொண்டதாக அரச சட்டத்தரணி கூறியுள்ளார்.
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
