More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • இளம் மனைவியின் வெட்டிய தலையுடன் வீதியுலா வந்த நபர்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இளம் மனைவியின் வெட்டிய தலையுடன் வீதியுலா வந்த நபர்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
Feb 10
இளம் மனைவியின் வெட்டிய தலையுடன் வீதியுலா வந்த நபர்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் மனைவியின் தலையை துண்டித்து அதனுடன் தெருவில் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் இடம்பெற்றுள்ளது.



மோனா ஹெய்டாரி,(17) (mona heidari) எனும் பெண் அவரது கணவர் மற்றும் மைத்துனரால் கொல்லப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளிட்யிட்டதாக் ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் இருவரையும் அவர்களின் மறைவிடத்தில் நடத்திய சோதனையின் போது கைது செய்தனர். அதேவேளை , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகும் போது வெறும் 12 வயதுதான், என்றும் கொலை செய்யபட்ட அவருக்கு மூன்று வயது மகன் உள்ளார்.



ஈரானில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது பெண்களுக்கு 13 வயது மற்றும் ஆண்களுக்கு 15 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெய்டாரியின் கொலையைத் தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களைச் சீர்திருத்தவும், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்தவும் கோரிக்கைகள் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளன.



இந்த வழக்கு குறித்து ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவரான என்சீஹ் கசாலி, "அவசர நடவடிக்கைகளை" எடுக்குமாறு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.



இந்த சம்பவம் குறித்து சக நாடாளுமன்ற உறுப்பினர் எல்ஹாம் நடாப் கூறுகையில்,



"துரதிர்ஷ்டவசமாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால், இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் காண்கிறோம்." என்றார்.



ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த கொலையின் மீது அதிர்ச்சி மற்றும் கோபத்தின் வெளிப்பாட்டை தெரிவித்துள்ளன. இதுகுறித்து, சீர்திருத்தவாதி நாளிதழான சசாண்டேகி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,



“நபர் ஒருவர் பெண்ணின் தலை துண்டித்து அதை தெருக்களில் காட்டி பெருமிதம் கொண்டார், இப்படிப்பட்ட சோகத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மீண்டும் பெண் கொலைகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்



வழக்கறிஞர் அலி மொஜ்தாஹெட்சாதே சீர்திருத்தவாத பத்திரிகையான ஷார்க்கில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளே கௌரவக் கொலைகளுக்கு வழி வகுப்பதாக குற்றம் சாட்டினார்.



அதேவேளை கடந்த மே 2020 இல், இதே போன்று ஒரு நபர் தனது 14 வயது மகளின் தலையை துண்டித்து "கௌரவக் கொலை" செய்ததாக கூறிய நிலையில், அதன்பின்னர் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதேபோன்று  மீண்டுமொரு கொடூர  சம்பவம் அரங்கேறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.



Gallery



ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Mar08

உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Mar08

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Feb27

ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில

Feb28

.

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ

Feb10

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம

Mar02

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என

May04

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும

Feb10

பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர

Mar05

யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (10:55 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (10:55 am )
Testing centres