இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மை, ஆடை வடிவமைப்பு மற்றும் பிற துணைத் துறைகளையும் மேம்படுத்த உதவும் என அச் சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதோடு இலங்கை சுற்றுலாத்துறையானது ‘திருமண சுற்றுலா’விற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். நிகழ்வு முகாமைத்துவ நிறுவனங்கள், திருமணத்தை திட்டமிடுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏனையவர்களை ஒரே மேடையின் கீழ் பட்டியலிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
திருமண சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளுடன் இலங்கை உறவுகளை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும் அதேவேளை , ஐரோப்பா, ஆசியா மற்றும் பல சந்தைகளில் திருமண தலமாக இலங்கை ஏற்கனவே பெயர் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத
மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ
