பிரஷர் குக்கர் குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறது.
இருப்பினும், பல காரணங்களால் இந்த குக்கர் சில நேரங்களில் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.
எனவே பிரஷர் குக்கரைப் பயன்படுத்துபவர்கள், ஆபத்துக்களைத் தவிர்க்க சில உணவுப் பொருட்களை அதில் சமைக்காதீர்கள்.
இப்போது குக்கரில் சமைக்கக்கூடாத உணவுப் பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
குக்கரில் அரிசியை சமைப்பதால், அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் உருவாகி, பல தீங்கு விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை கூடி ஆபத்தான நோய்களை உண்டாக்கும்.
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளது. எனவே இதை குக்கரில் சமைக்கக்கூடாது. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும். அதுவும் புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பல உடல்நல நோய்களுக்கு வழிவகுக்கும்.
முட்டை
பிரஷர் குக்கரில் முட்டைகளை வேக வைக்கும் போது பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. முட்டைகளை வேக வைப்பதற்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எனவே அதிக வெப்பநிலையில் வைத்து முட்டைகளை குக்கரில் சமைத்தால் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
பொதுவாக மீன் வேகமாக வெந்துவிடும். அத்தகைய மீனை குக்கரில் ஒருபோதும் சமைக்கக்கூடாது. ஏனெனில் மீன் சற்று அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், அதன் சுவையே கெட்டுவிடும். அதோடு மீனில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும். எனவே மீனை குக்கரில் சமைக்காதீர்கள்.