மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிகளுக்கு பிரித்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தைகள் குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா இறந்துவிட்டதாக அவரது தம்பிக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தாய், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் தான் அடித்து கொன்றுள்ளார் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய அவரது கணவர் லட்சுமணனை தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சரண்யா மற்றும் லட்சுமணன் இருவரும் பள்ளி படிக்கும்போதே காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், கூலி வேலை செய்யும் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறினார்.
சம்பவத்தின் போது, தான் குடிக்க வாங்கி வைத்திருந்த மதுவை மனைவி குடித்துவிட்டு, தன் குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு, அது சரியில்லை என தகராறு செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த நான், மனைவியை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து லட்சுமணனை தீவட்டிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்
மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள
சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல
மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ
ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
