மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் 2022” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அது போலியானதெனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த போலி வேலைவாய்ப்பு பிரச்சாரம் நடவடிக்கையில், ஆட்சேர்ப்பு மூலம் உடனடி பணி அனுமதிகளை வழங்கப்படுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளதென கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சாரம் பொய்யானது என மீண்டும் வலியுறுத்திய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் மற்றும் குடிவரவு மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் குடியேற்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க உயர் ஸ்தானிகராலயம் இணைப்பொன்றையும் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
