பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் உடலை மரத்தில் அவர்கள் தொங்க விட்டனர்.
அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு போலீசார் மீது அந்த கும்பல் கற்களை வீசியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை பொது மக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தமது அரசு சகித்துக் கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து பஞ்சாப் காவல்துறைத் தலைவரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் இம்ரான்கான் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை
உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்ட
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற கு
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
69-வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாண
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள