ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் கடந்த வியாழன் அன்று எச்சரித்திருந்தது. எனினும் போராட்டம் தொடரும் நிலையில், பொதுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1, 40,000 பேரில் 1,35,000 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
90 சதவீத ஆசிரியர்களை அரசு இடை நீக்கம் செய்த பிறகு ஜிம்பாப்வேயில் எந்தப் பள்ளியும் இயக்கவில்லை. தலைநகர் ஹராரேயில் உள்ள பள்ளி வகுப்பறைகள் மற்றும் மைதானங்களில் மாணவர்கள் விளையாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் கல்வி கற்பது பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகள் இயக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
அதிபர் எம்மர்சன் மங்காக்வா தலைமையிலான ஜிம்பாப்வே அரசு, அமெரிக்க டாலர் மதிப்பில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்திவிட்டு ஜிம்பாப்வே டாலர்களுக்கு அதை மாற்றியுள்ளது. அதனால் ஆசிரியர்களின் சம்பள விகிதம் குறைந்து விட்டதாக முற்போக்கு ஆசிரியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் குண்டர் முறைகளை பயன்படுத்தி ஆசிரியர்களை வேலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல்
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர
உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளி
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
