ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.
காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது.
சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு அந்த அணி கடும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், ரோமன் பவெல் அதிரடியாக ஆட கூடியவர்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பண
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
