சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக்கு S$5,000 அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்னவென்றால் இரண்டு ஆண்கள் அவர்களது கடையில் வழங்கப்படும் பாலியல் சேவைகளை ஏற்றுக்கொண்டு பணம் செலுத்துமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உணர்ந்ததால், அவர்கள் உடனைடியாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து குறித்த நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இச் சம்பவம் Singapore Rangoon சாலையில் உள்ள சிட்டிகேட் குடியிருப்பில் உள்ள வெஸ்ட் வெல்னஸில் நடந்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
19 மற்றும் 21 வயதுடைய அந்த இருவரும், பிப்ரவரி 10, 2021 அன்று இரவு சுமார் 10:50 மணியளவில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் S$50, S$10 நிர்வாகக் கட்டணத்துடன், ஒரு மணி நேர உடல் மசாஜுக்குச் செலுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கட்டணம் செலுத்திய பின்பு அந்த இரு ஆண்களும் தனித்தனி அறைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டு, முழுமையாக ஆடைகளை அவிழ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் உள்ளாடைகளையும் ஷார்ட்ஸையும் அவிழ்க்க மறுத்துள்ளனர்.
அப்போது மிகா லின் யி ஹுய் (49) என்ற மசாஜ் செய்பவர், 19 வயது இளைஞரின் அறைக்குள் நுழைந்து, அவரது பின் பகுதியை மசாஜ் செய்யத் தொடங்கியுள்ளார். அதனையடுத்து அந்த மசாஜ் செய்பவர் அந்த இளைஞனை திரும்பி படுக்க சொல்லி, அவரிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.
ஷின் மினின் கூற்றுப்படி, அந்த நபர் பலமுறை தலையை அசைத்து அந்த பெண்ணிடம் “வேண்டாம்” என்று கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் லின் எந்த வார்த்தையும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார், மேலும் 44 வயதான மற்றொரு மசாஜ் செய்பவருடன் அந்த 19 வயது வாலிபர் அறைக்கு திரும்பியுள்ளார்.