ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ உதயநிதி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், அமைச்சர் கே.என்.நேரு , பொன்முடி , துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வாக்களித்தனர். அத்துடன் நடிகர் விஜய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.
இந்நிலையில் தியாகராயநகர் வித்யோதயா பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்கு மையத்தில் வி.கே. சசிகலா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். இது மிகவும் கஷ்டமான சூழலாக உள்ளது. ஆளும் கட்சியின் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அராஜகம் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் காவல்துறையினரும், நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய சசிகலா , அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டும் போதாது ; நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ
இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க
இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டிய
