ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பெலிசிட்டி ஏஸ் என்ற மிகப் பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பல் ஜேர்மன் துறைமுகத்திலிருந்து கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி 22 மாலுமிகளுடன் அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி பயணித்துள்ளது.
இந்நிலையில் அட்லாண்டிக் கடல் பகுதியில் அசோர்ஸ் தீவு அருகே நேற்று சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.
அந்த கப்பலில் வோல்ஸ்வோகன், லம்போகிரினி, போர்ஷே, ஆடி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு ரக கார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கப்பலில் ஏற்பட்ட தீயினால் 1,100இற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த தகவலை அறிந்த மீட்புப் படையினர் அதிலிருந்த 22 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இருப்பினும் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்த வண்ணமுள்ளதாகவும், மேலும் சொகுசு ரக கார்கள் தீயில் எரியும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்
அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
